உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவி உட்பட 2 பேர் மாயம்

மாணவி உட்பட 2 பேர் மாயம்

மாணவி உட்பட 2 பேர் மாயம் பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 10---பொம்மிடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 54; கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜலட்சுமி, 22, டிப்ளமோ படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 7ல் மாலை வீட்டிலிருந்து மாயமானார். புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், இண்டூரை சேர்ந்த, 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 6 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி