மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
22-Sep-2024
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்கு 'சீல்'காரிமங்கலம், அக். 9-தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் ஆகியோர், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி, காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். இதில், காரிமங்கலத்தில் ஒரு பெட்டி கடை மற்றும் அனுமந்தபுரத்தில் ஒரு மளிகை கடை என, 2 கடைகளில், தடை செய்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 2 கடைகளுக்கும் தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு, 'சீல்' வைத்தனர்.
22-Sep-2024