எலி பேஸ்ட் சாப்பிட்ட2 மாணவியருக்கு சிகிச்சை
அரூர்:அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியை சேர்ந்தவர் தியாஸ்ரீ, 11, மற்றும் அமுர்தா, 10. இருவரும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று காலை, 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்த இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். ஆசிரியர்கள் கேட்ட போது, நேற்று முன்தினம் காலை எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறினர். ஆசிரியர்கள் தகவலின்படி, பள்ளிக்கு வந்த பெற்றோர், மாணவியரை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.