உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியில் முகாமிட்ட 20 யானைகள்

ஏரியில் முகாமிட்ட 20 யானைகள்

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது பெய்துள்ள மழையால், வனத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. இதனால், யானைகள் அடிக்கடி ஏரிகளுக்கு படையெடுத்து, ஆனந்த குளியல் போட்டு செல்கின்றன.நேற்று முன்தினம் மாலை, 20க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் வனத்திலிருந்து வெளியேறி, அஞ்செட்டி - ஓகேனக்கல் சாலையிலுள்ள கேரட்டி கிராமம் அருகே ஏரியில் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்தன.பின்னர், ஏரியில் கும்மாளமிட்ட யானைகள், வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை