உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மலைப்பாதையில் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம்

மலைப்பாதையில் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம்

ஒகேனக்கல்:ஒகேனக்கல்லுக்கு, ஈமச்சடங்கு காரியத்திற்கு வந்த போது, மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 21 பேர் காயம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தீர்த்தமலை மொண்-டுகுழியை சேர்ந்தவர் அன்பழகன், 47. இவர் கடந்த, 14ல், உடல்-நிலை குறைவால் இறந்தார். இவருக்கான, 11 நாள் காரியம் நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவரது மனைவி உண்ணாமலை உள்ளிட்ட உறவினர்கள், 2 வேன்களில் ஒகேனக்கல் வந்தனர். அப்போது வேனை பையர்நாயக்கன்பட்-டியை சேர்ந்த முனியப்பன், 25, என்பவர் ஓட்டினார். ஒகேனக்கல் கோண கணவாய் என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்-குள்ளானது. இதில், வேனில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்-கினார். சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் வேனில் வந்த டிரைவர் முனியப்பன், 25, குட்டபூசாரி, 80, எல்லப்பன், 37, உட்பட, 21 பேர் காயம் அடைந்தனர். ஒகே-னக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை