உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெவ்வேறு சம்பவத்தில் இளம் பெண்கள் 3 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இளம் பெண்கள் 3 பேர் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்னப்பள்ளியை சேர்ந்தவர் சீனா மகள் மானஷா, 19. நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த அல்லுபாபு மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், கர்னப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா மகள் ரம்யா, 23. நேற்று முன்தினம் நண்பகல், 12:15 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது அண்ணன் முரளி, 28, போலீசில் கொடுத்த புகாரில், ஓசூரை சேர்ந்த சோமா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இரு சம்பவம் குறித்தும், பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டாவை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ரஞ்சிதா, 22. கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த, 2 மாதமாக தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 17 நண்பகல், 12:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் மங்களா, 46, கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !