உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாதர்மபுரி, செப். 20-பாலக்கோடு அடுத்த, பஞ்சப்பள்ளி சுற்று வட்டார பகுதியில் வசிக்கும், இருளர் இன மக்களுக்கு, பஞ்சப்பள்ளி அடுத்த பட்டாபி நகரிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், 1,200 சதுர அடி வீதம், 32 பேருக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று பாலக்கோடு தாசில்தார் ரஜினி, மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன் மற்றும் ஆர்.ஐ., வெங்கடாசலம், வி.ஏ.ஓ., சிரஞ்சீவி உள்ளிட்ட அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து, வீட்டு மனைகளை அடையாளம் காட்டி, பட்டா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி