உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தலைமறைவு குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது

தலைமறைவு குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், 26, மோகன்குமார், 27. இருவரும், 2023ல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வந்தனர். அதேபோல் களரம்பட்டி, வீரவாஞ்சி தெருவை சேர்ந்தவர் பூபதி, 34; இவர், 2021ல் குற்ற வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். அதே வீரவாஞ்சி தெருவை சேர்ந்த இன்பராஜ், 26; 2018ல் அடிதடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். நான்கு பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது. அவரவர் வீடுகளில் இருந்த வினோத்குமார், மோகன்குமார், பூபதி, இன்பராஜை, கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !