பென்னாகரத்தில் 400 ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வார சந்தையில், 400 ஆண்டு பழமையான நான்கு நாணயங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரலாற்று சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. பென்னாகரம் பகுதியில் கிடைக்கும் வரலாற்றுச் சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் பென்னாகரம் வரலாற்று மையம் என்ற அமைப்பை சார்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பென்னாகரம் வாரச்சந்தையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரலாற்று ஆசிரியர்கள் திருப்பதி, பெருமாள், கணேசன் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து வாரச்-சந்தையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 400 ஆண்-டுகள் பழமையான நான்கு நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து வரலாற்று ஆசிரியர் திருப்பதி கூறுகையில்; இந்த நாணயங்கள் 1565- - 1799 ஆண்டுகளில் ஆட்சி செய்த மைசூர் உடையர்கள் காலத்திய நாணயங்கள். வாரச்சந்தை என்பதால் வியாபாரத்தில் இந்த நாணயங்கள் இந்த பகுதியில் பயன்படுத்தப்-பட்டு இருக்கலாம்.இவ்வாறு கூறினார்.