சூதாடிய 5 பேர் கைது
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை எஸ்.ஐ., விக்னேஷ் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு நார்த்தம்பட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், 37, சிதம்பரம், 37, ஆனந்த், 36, பச்சியப்பன், 42, தம்பா கவுண்டர், 55, ஆகிய, 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 4,200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.