உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி உழவர் சந்தையில் 69.69 டன் காய்கறி விற்பனை

தர்மபுரி உழவர் சந்தையில் 69.69 டன் காய்கறி விற்பனை

தர்மபுரி, தர்மபுரி டவுனில் உள்ள உழவர் சந்தையில், விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த இரண்டு நாளில், 69.69 டன் காய்கறிகள் விற்பனையாகின. தர்மபுரி உழவர் சந்தையில் நாளொன்றுக்கு, 20 முதல், 25 டன் காய்கறிகள் சராசரியாக விற்பனையாகும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த, 2 நாளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை முதல், 133 விவசாயிகள், 7,750 நுகர்வோர்கள் வந்தனர்.இதில், 34.98 டன் காய்கறிகள், 3 டன் பழங்கள் மொத்தம், 15.51 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின. நேற்று, 128 விவசாயிகள், 7,674 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்தனர். இதில், 34.71 டன் காய்கறி, 3 டன் பழங்கள் என, 15.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அதன்படி, 2 நாளில், 69.69 டன் காய்கறிகள், 6 டன் பழங்கள் என, 30.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ