உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி

தர்மபுரி, தமிழகத்தில் எழுதப்படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்று கொடுப்பதற்காக, 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்' தொடங்கப்பட்டது.அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 15 அன்று தர்மபுரி மாவட்டம், பிடமனேரியில் வசித்து வரும் ஈஸ்வரி, 75, 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்' மூலம் நடந்த தேர்வில், தேர்ச்சி பெற்றார். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா மதிப்பெண் சான்றிதழை நேற்று, ஈஸ்வரிக்கு நேரில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !