மேலும் செய்திகள்
ரூ.9.88 லட்சத்துக்கு 11 டன் எள் ஏலம்
05-Aug-2025
தர்மபுரி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஜூலை, 21 முதல், எள் மறைமுக ஏலம் நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:பொன்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் எள் ஒரு கிலோ, 80 வரை மட்டுமே உள்ளூர் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம், வெளியூர் வியாபாரிகள் எள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டதில், உள்ளூர் விலையை விட, 15 முதல், 20 ரூபாய் வரை கூடுதலாக விலை கிடைத்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில், 276 விவசாயிகள் கொண்டு வந்த, 899 குவிண்டால் எள், 82 லட்சம் ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
05-Aug-2025