உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி:கோடை விடுமுறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க மாவட்ட தலைவர் ராஜம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிதா, பொருளாளர் தெய்வாணை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லில்லி புஷ்பம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.இதில், துறை அமைச்சர் கீதாஜீவன் ஒப்புக் கொண்டதுபோல், கோடைகாலத்தில் ஒரு மாத கால விடுமுறை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், 1,333 அங்கன்வாடி மையங்களில் உள்ள, 565 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பு கவனிக்கும் ஊழியர்களுக்கு, 5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு சார்பில், 2018ல் வழங்கப்பட்ட மொபைல்கள் பழுதாகியுள்ளதால் புதிய மொபைல்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். *கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்துாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சுஜாதா நன்றி கூறினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை