மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
04-Oct-2024
போதை பொருள் ஒழிப்பு பேரணிபாப்பிரெட்டிப்பட்டி, அக். 10---கடத்துாரில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி முதல்வர் வேதபாக்கியம் தலைமையில் நடந்தது. இந்த பேரணியை இன்ஸ்பெக்டர் சுகுமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லுாரியிலிருந்து துவங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, பின் கல்லுாரியை அடைந்தது.பேரணியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, பதாகைகள் ஏந்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பேராசிரியர் சேட்டு, எஸ்.ஐ., நவீன், உள்ளிட்ட கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
04-Oct-2024