உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிமென்ட் சாலையை சீரமைக்க அரூர் நகர மக்கள் வலியுறுத்தல்

சிமென்ட் சாலையை சீரமைக்க அரூர் நகர மக்கள் வலியுறுத்தல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறத்தில் இருந்து, அம்பேத்கர் நகர் வழியாக, தீர்த்தமலை இணைப்பு சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை உள்ளது. இச்சாலை வழி-யாக, சங்கிலிவாடி, செல்லம்பட்டி, கீழானுார், பொய்யப்பட்டி, மாவேரிப்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, தீர்த்தமலை உள்-ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்-லுாரி மாணவர்கள் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் சிமென்ட் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயம-டைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நக-ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி