உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அனுமதியின்றி செயல்பட்ட மது பாருக்கு அதிகாரிகள் சீல்

அனுமதியின்றி செயல்பட்ட மது பாருக்கு அதிகாரிகள் சீல்

தர்மபுரி, நவ. 20-தர்மபுரி அருகே, அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், 'சீல்' வைத்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், 67 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடைக்கு அருகில், மது பிரியர்கள் மது குடிக்க, பார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தர்மபுரி மாவட்டத்தில், 14 இடங்களில் பார் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தர்மபுரி அடுத்த, முத்துகவுண்டன் கொட்டாயில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை வளாகத்தை வாடகைக்கு விட்டவர், டாஸ்மாக் அருகில், அரசின் அனுமதியின்றி பார் நடத்தி வந்தார். இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, விசாரணை செய்த, தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், முத்துகவுண்டன் கொட்டாய் மற்றும் அதியமான்கோட்டையில் அனுமதியின்றி செயல்பட்ட, 2 பார்களுக்கு, 'சீல்' வைத்தனர்.இதில், டாஸ்மாக் மேலாளர் மகேஷ்வரி, தாசில்தார் செல்வகுமார், கலால் இன்ஸ்பெக்டர் கலையரசி, எஸ்.ஐ., கோபி மற்றும் தலைமை காவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை