உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேர்தலில் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

தேர்தலில் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

மொரப்பூர் : தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர் தலைமை வகித்தார். மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், மகளிர் சுய உதவி குழுவினர் ஏப்., 19ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்