மேலும் செய்திகள்
குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
09-Nov-2024
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 20---பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை மற்றும் போலீசார் இணைந்து, இளம்வயது திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கவுரிசங்கர், பொம்மிடி எஸ்.ஐ., மாரப்பன் ஆகியோர் பேசினர். இதில், வளரிளம் பெண்களுக்கு அறிவுரைகள், இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து, உளவியல் சார்ந்த பிரச்னைகளை விழிப்புடன் கையாளுதல், குழந்தைகளுக்கான உதவி எண், 1098. இளம் வயது திருமணம் தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இளம்வயதில் திருமணம் செய்தால் ஏற்படும் விளைவுகள், குழந்தை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள், சமூக வலை தளங்களை மாணவ, மாணவியர் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் மற்றும் 'காவலன்' செயலி நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில் டாக்டர் சுதா, பகுதி சுகாதார செவிலியர் சிங்காரம், சுகாதார ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன், கார்ல் மார்க்ஸ், சேகர், முரளி, புள்ளியல் நிபுணர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, மெணசி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும்நடந்தது.
09-Nov-2024