மேலும் செய்திகள்
ரோட்டில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி
13-Oct-2026
ஆந்தராக்ஸ் தொற்றால் காட்டு யானை பலி
16-Oct-2026
ஆசிய பாரா தடகள வீரருக்கு என்ன நேர்ந்தது?
28-Oct-2026
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் காட்டெருமை இறந்து கிடந்தது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகத்திற்க்குட்பட்ட பொம்மிடி அடுத்த கவரமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகளில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. பொம்மிடி - தென்கரைகோட்டை வனப்பகுதியில் உள்ள பாத்திமா நகரில் உள்ள உத்திரியப்பன் என்பவரின் விவசாய நிலத்தில், 5 வயதுள்ள பெண் காட்டெருமை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மொரப்பூர் உதவி வன பாதுகாவலர் சரவணன் உள்ளிட்ட வனத்துறையினர் விசாரணை நடத்தினர். காட்டெருமை கர்ப்பமாக இருந்ததும், பிரசவிக்க முடியாமல் உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் அரூர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே காட்டெருமையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
13-Oct-2026
16-Oct-2026
28-Oct-2026