உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டுறவு வார விழாவையொட்டி தர்மபுரியில் ரத்த தான முகாம்

கூட்டுறவு வார விழாவையொட்டி தர்மபுரியில் ரத்த தான முகாம்

கூட்டுறவு வார விழாவையொட்டிதர்மபுரியில் ரத்த தான முகாம்தர்மபுரி, நவ. 15-தர்மபுரி மாவட்ட கூட்டுறவுத்துறையின், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடந்தது. கூட்டுறவுத்துறையின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரியும், 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ரத்த தானம் வழங்கினர். இவர்களுக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டன.முகாமில், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குனர் மலர்விழி, ரத்த வங்கி டாக்டர் கன்னியா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !