உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொலையான பெண் உடல் 18 நாட்களுக்கு பின் மீட்பு

கொலையான பெண் உடல் 18 நாட்களுக்கு பின் மீட்பு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சிட்லிங்கை சேர்ந்தவர் விஜயகுமார், 42; கூலி தொழிலாளி. உறவினரான சேலம் மாவட்டம், காக்கம்பாடியை சேர்ந்த வெள்ளச்சி, 63, என்பவரிடம், 10,000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதை திரும்ப கேட்டு செப்., 5ல் விஜயகுமார் வீட்டிற்கு வந்த வெள்ளச்சி, வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வெள்ளச்சியை வெட்டி கொன்றதாக, வேலுார் பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில், செப்., 15ல் விஜயகுமார் சரணடைந்தார். கோட்டப்பட்டி போலீசார், விஜயகுமாரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று தேடியதில், வெள்ளச்சி உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், தர்மபுரி சிறையிலிருந்த விஜயகுமாரை, போலீசார் அழைத்து வந்து, சிட்லிங் வனப்பகுதியில் கிடந்த வெள்ளச்சி உடலை நேற்று முன்தினம் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை