மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாதவர் சாவு
13-Feb-2025
ஆத்துார் வசிஷ்ட நதியில்மூதாட்டி உடல் மீட்புஆத்துார்:ஆத்துார் அருகே, அப்பமசமுத்திரம் வழியாக செல்லும் வசிஷ்ட நதி பகுதியில், எலும்பு கூடான நிலையில் பெண் உடல் கிடந்ததை, நேற்று ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எலும்பு கூடாக கிடந்த பெண் உடலை, போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, விசாரணை நடத்தி வந்தனர். இதில், ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த, தர்மலிங்கம் மனைவி தெய்வானை, 85, என்பதும், இவரை கடந்த, 2024, டிச., 27ல், காணவில்லை என, ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளித்துள்ளனர் என்பது தெரியவந்தது. வசிஷ்ட நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வந்து உயிரிழந்தாரா என, விசாரிக்கின்றனர்.
13-Feb-2025