தர்மபுரியில் புத்தக திருவிழா தொடக்கம்
தர்மபுரி, தர்மபுரி அருகே, பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில், 7ம் ஆண்டு புத்தக திருவிழாவை, ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் இறையன்பு நேற்று துவக்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டார். தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட நுாலகத்துறை, தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து, 7ம் ஆண்டு புத்தக திருவிழாவை தர்மபுரியில் நடத்துகிறது. மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமை வகித்தார். தகடூர் புத்தக பேரவை மாவட்ட தலைவர் சிசுபாலன் வரவேற்றார்.தர்மபுரி பா.ம.க.,- எம்.எல்.ஏ., வெங்கட்டேஷ்வரன் முன்னிலை வகித்தார். தமிழக முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார். செப்., 26 முதல் அக்., 5 வரை புத்தக திருவிழா நடக்கவுள்ளது. டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், ஆர்.டி.ஓ., காயத்ரி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.