பி.எஸ்.என்.எல்.,ல் 4ஜி சுதந்திர தின சலுகை
தர்மபுரி, பி.எஸ்.என்.எல்., நிறுவன தர்மபுரி மண்டல துணை பொது மேலாளர் பிரபுதுரை, நேற்று பாரதிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், நிருபர்களிடம் கூறியதாவது:தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மண்டலத்தில், 3.03 லட்சம் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் உள்ளனர். தர்மபுரி மண்டலத்திற்கு வருடம், 32 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையை ஒரு ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு தினமும், 2 ஜி.பி., அதிவேக டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் உள்ளுர், எஸ்.டி.டி., அழைப்புகளை வழங்குகிறது. இதில், சிம் கார்டு முற்றிலும் இலவசம். இந்த சிறப்பு சலுகை ஆக., 31 வரை மட்டும் உள்ளது. மற்ற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல்.,லுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகை கிடைக்கும். இதன் காரணமாக, 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகள் அதிவேகமாக செயல்படும். சிம் கார்டு விற்பனை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் நேற்று வரை, 3,373 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.