உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட 79 பேர் மீது வழக்கு

பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட 79 பேர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில், காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று, பா.ம.க., சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டியில், பா.ம.க., உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வமான வேலுசாமி உள்ளிட்ட பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், இடையூறு செய்ததாக, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில், வி.ஏ.ஓ., நித்யா புகார் அளித்தார்.இதையடுத்து மாவட்ட செயலாளர் அரசாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, நிர்வாகிகள் மைக் கண்ணன், கார்த்திக், தங்கராஜ், ஆனந்த், சத்யராஜ், செந்தில், கோவிந்தசாமி உள்ளிட்ட சிலர் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொம்மிடியில், 30 பேர், கடத்துாரில், 40 பேர் என, 79 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.* நேற்று காலை, 9:00 மணிக்கு அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள டீ கடைக்குள் சென்ற பா.ம.க.,வினர், அதன் உரிமையாளரிடம் கடையை உடனடியாக மூடு, இல்லையென்றால் அடித்து உடைத்து காலி செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். புகார்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.ம.மு.க., ஆட்சி மன்ற குழு தலைவருமான முருகன், தர்மபுரி பா.ம.க., கிழக்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து, நிர்வாகிகள் சக்திவேல், பெருமாள், பழனிசாமி ஆகியோர் மீது அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை