உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 17 வயது மாணவியை மணந்தவர் மீது வழக்கு

17 வயது மாணவியை மணந்தவர் மீது வழக்கு

ஊத்தங்கரை: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் சரண், 25; துணி வியாபாரி. இவர், தன் உறவினரான, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த, 17 வயதான, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும் மாணவியை 14ம் தேதி காலை, 6:00 மணிக்கு, சாமல்பட்டி பகுதியிலுள்ள முருகன் கோவிலில் வைத்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தார். மாணவிக்கு, 18 வயது பூர்த்தியடையும் முன், திருமணம் செய்ததால், தகவலறிந்த ஊத்தங்கரை குழந்தைகள் நல அலுவலர் காந்திமதி, 56, ஊத்தங்கரை மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். குழந்தை திருமண சட்டத்தில், சரண் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை