உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குட்டையில் மூழ்கி குழந்தை பலி

குட்டையில் மூழ்கி குழந்தை பலி

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த எலங்காளப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், 27. இவரது மனைவி கல்பனா, 22. இவர்களது மகன் ஸ்ரீஹாஸ், 3. நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் எலங்காளப்-பட்டி அருகிலுள்ள குட்டையில் குளிக்க சென்றனர். அவர்க-ளுடன் சென்ற ஸ்ரீஹாஸ் நீரில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கினான். அக்கம் பக்கத்தினர், குழந்-தையை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலக்கோடு, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ