மேலும் செய்திகள்
தெரிந்ததும்... தெரியாததும்!
15-Nov-2024
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிதர்மபுரி, நவ. 15-தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நேற்று பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகம் வழியாக செந்தில் நகர், பாரதிபுரம் வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் தின உறுதிமொழியை, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றனர். பின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
15-Nov-2024