உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்., பந்தாரப்பள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தி மாது, எம்.ஜி.ஆர்., இளைஞ-ரணி செயலாளர் கண்மணி, கிளை செயலாளர் மாது, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராமன், காசி மற்றும் வேடியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை