புயலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில், நேற்று நடந்தது.விவசாயிகள் பேசுகையில், 'தர்மபுரி மாவட்டத்தில், கால்நடை காப்பீட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். எண்-ணேகோல் புதுார் கால்வாய் திட்டம் மந்தகதியில் நடந்து வருகி-றது. காவிரி மற்றும் தென் பெண்ணையாற்றில் தண்ணீர் கரைபு-ரண்டு ஓடினாலும், தர்மபுரி மாவட்டத்தில் விவசாய பாசனத்-திற்கு தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. நெல் அறுவடை செய்யும் இயந்திர உரிமையாளர்கள், நெல் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு, 2,500 ரூபாய் வாங்குகின்றனர்.'மற்ற மாவட்டங்களை போல், வாடகையை குறைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். பெஞ்சல் புயலால் பாதிக்கபட்ட மர-வள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கரும்புக்கு இன்சூரன்ஸ் செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த, 2013 முதல், ஒரு ஏக்கர் கரும்புக்கு, 2,900 ரூபாய் இன்சூரன்ஸ் கட்டியும் பயனில்லை. சம்பந்தபட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.கலெக்டர் சாந்தி பதிலளித்து பேசுகையில், ''எண்ணேகோல்-புதூர் திட்டம் விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிக-ளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தார். பெஞ்சல் புயலால் பாதிக்-கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவ-டிக்கை எடுக்கபட்டு வருகிறது. பிப்., மாதம் முதல் வியாழக்கிழ-மையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும். சப்போட்-டாவை தர்மபுரியில் உள்ள தனியார் நிறுவனம் நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது. அதை சப்போட்டா பயிரிட்-டுள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.''கரும்புக்கு இன்சூரன்ஸ் செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்-பீடு வழங்காத, தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி, பாதிப்புக்கான இழப்பீடு மற்றும் செலுத்திய இன்சூரன்ஸ் தொகை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ., கவிதா தெரிவித்தார்.