கல்லுாரி முன் விபத்து அபாயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சேலம்: சேலம், கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரி முன், வேகத்-தடை அமைக்க வேண்டும் என மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் கோரிமேடு பகுதியில், அரசு மகளிர் கலைக்கல்லுாரி உள்ளது. இதில், 2,000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வரு-கின்றனர். கல்லுாரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோ, டூவீலர்களில் மாணவியர் வருகின்றனர்.இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில், அப்பகுதியில் நெரிசல் அதிக அளவில் இருக்கிறது. ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ளதால், ஏற்காடு சென்று, திரும்பும் கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக சாலையில் வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதனால், மாணவியர் மற்றும் பெற்றோர் அச்சத்துக்குள்ளாகின்-றனர். கல்லுாரி அருகில் வேகத்தடை அமைப்பதோடு, காலை, மாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.