உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உள்ளாட்சி தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தற்காலிக பணியாளர்களைநிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்அரூர், அக். 11-அரூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்., பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி பேரூராட்சி, டேங்க் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர், துாய்மை காவலர் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் வேடன் தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்க்குமரன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செயலாளர் மணி, ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி, பேரூராட்சி பணியாளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 10 மற்றும் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். 60 வயது முடிந்த, அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கும் ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில், பணி செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாது. அரூர் உள்ளாட்சி துாய்மை காவலர்கள், பணியாளர்கள், டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, 3 மாதம் பயிற்சி அளித்து, அனைவருக்கும் உபகரணங்கள் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ