உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிலம்பம் போட்டியில் தர்மபுரி மாணவர்கள் வெற்றி

சிலம்பம் போட்டியில் தர்மபுரி மாணவர்கள் வெற்றி

தர்மபுரி: தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம், மேச்சேரி சிலம்பாட்ட நற்பணி சங்கம் மற்றும் ஜலகண்டாபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய, மாநில அளவிலான சிலம்பம் போட்டி கடந்த, 25 அன்று சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, பாரம்பரிய சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த, 10 மாணவர்கள் பங்கேற்று முதல், 3 இடங்களை பிடித்தனர். வெற்றிபெற மாணவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ