மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
17 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
17 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
17 hour(s) ago
தர்மபுரி: ஒகேனக்கல் சினிஃபால்ஸில் இருந்து மெயின் அருவிக்கு செல்ல வசதியாக பாலம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மலையில் தலைக்காவிரி என்ற இடத்தில் சிறு ஓடையாக உற்பத்தியாகும் காவிரி தமிழகத்தை வளம் கொழிக்க செய்ய கிருஷ்ணகிரி மாவட்டம் பிலி குண்டுலு வழியாக, ஒகேனக்கல் வந்து நீர் வீழ்ச்சியாக பெருக்கெடுத்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கல்லில் ஆயிரம் இடத்துக்கு மேல் நீர் வீழ்ச்சியாக பொங்கி பாயும் காவிரியின் இயற்கை அழகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் காவிரி வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி மொத்தம் 800 கி.மீ., பாய்ந்து செல்கிறது. இதில், 320 கி.மீ., கர்நாடகாவிலும் 416 கி.மீ., தமிழகத்திலும், மீதமுள்ள 84 கீ.மீட்டர் தூரம் தமிழக, கர்நாடகா எல்லையில் பாய்ந்து செல்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலவில் தமிழக காவிரி எல்லையாக இருந்த போதும், பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல் மாறுகொட்டாய் வரையில் 84 கி.மீ., தூரம் ஒரு கரை தமிழக வனத்துறை பகுதியிலும், மறு கரை கர்நாடகா மாநில மறுகரையிலும் தவழ்ந்து செல்கிறது. ஒகேனக்கல் காவிரியை ரசிக்க இரு மாநில கரைகளுக்கும் பரிசல் மூலம் சென்று ரசிக்கலாம். காவிரியின் ஐவர் பாணி, பெரியபாணி ஆகிய பகுதிகளை சுற்றுலா பயணிகள் ரசிக்க தமிழக வனப்பகுதியில் வாட்சு டவர் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு செல்ல தொங்குபாலம் வழியாக சினிஃபால்ஸ் குறுக்கேயுள்ள நடைபாதை வழியாக வாட்சு டவருக்கு வர வேண்டும். அங்கிருந்து பரிசல் மூலம் பரிசல் துறைக்கு செல்ல முடியும்.சினிஃபால்ஸ் பகுதியில் நடை பாதை தடுப்பு கடந்த 2005ம் ஆண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் நடைபாதை தடுப்பு கம்புகள் மட்டும் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டுள்ளது. வெள்ள பெருக்கு காலங்களில் இந்த தடுப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லும் வாய்ப்புள்ளது. சினிஃபால்ஸ் பகுதியில் இருந்து வாட்சு டவருக்கு செல்ல சிறு பாலம் அமைத்தால், பயணிகள் பாதுகாப்பாக சென்று வர வசதி கிடைக்கும். ஆனால், கடந்த 2005ம் ஆண்டு முதல் சினிஃபால்ஸ் குறுக்கேயுள்ள தடுப்புகளை சீர் செய்யவும், பாலம் அமைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரம் சினிஃபால்ஸில் குளிக்கவும், கடந்து செல்லவும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண வசூலுக்கு ஆண்டுதோறும் டெண்டர் விடப்பட்டு, 13 லட்ச ரூபாய் வருவாய் வருகிறது. ஆனால், சிறு பாலம் கட்டுவதற் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒகேனக்கல் சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், வளர்ச்சி பணிகள் செய்வதில் பனிப்போர் நடப்பதாக கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சினிஃபால்ஸ் பகுதியில் விரைவாக பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago