உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வன பகுதியில் மணல் கடத்திய 3 பேருக்கு அபராதம்

வன பகுதியில் மணல் கடத்திய 3 பேருக்கு அபராதம்

அரூர்: அரூர் வனப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய மூன்று பேருக்கு 74,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மண்டல வனப்பாதுகாவலர் முகமது இக்ரம்ஷா உத்தரவுப்படி, அரூர் மாவட்ட வன அலுவலர் செல்வராஜ் அறிவுரைப்படி, கோட்டப்பட்டி ரேஞ்சர் ராஜாமணி தலைமையில், பாரஸ்டர்கள் குமார், செல்வராஜ், கார்டு மூர்த்தி, கணேசன், ராஜகோபால் ஆகியோர் கோட்டப்பட்டி அடுத்த அம்மாபாளையம், நாகமரத்துப்பள்ளம், நரிப்பள்ளி கல்லாறு, மந்திகுளாம்பட்டி, கோரையாறு ஆகி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் அனுமதியின்றி மூன்று டிராக்டர்களில் மணல் அள்ளி கொண்டிருந்த பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்த பழனி (21), பாலகுட்டையை சேர்ந்த ஆண்டி (40), மேல் பாட்ஷா பேட்டையை சேர்ந்த சென்னன் (21) ஆகிய மூன்று பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்து 74,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை