உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நாய் மீது பைக் மோயதில் வாலிபர் பலி

நாய் மீது பைக் மோயதில் வாலிபர் பலி

தர்மபுரி: பாலக்கோடு அருகே நாய் மீது பைக் மோதியதில், பைக் கவிழ்ந்து படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பாலக்கோடு அடுத்த பில்லுஅள்ளியை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் மும்மூர்த்தி (26). ஓசூரில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் பைக்கில் வீட்டுக்கு வந்த மும்மூர்த்தி பாலக்கோடு அருகே சாலையில் குறுக்கே சென்ற நாய் மீது பைக்கை ஏற்றியுள்ளார். இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த மும்மூர்த்தி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று பரிதாபமாக இறந்தார். பாலக்கோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை