மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் மண் மற்றும் மணல் கடத்தியதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து இரு டிப்பர் லாரி மற்றும் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர். தர்மபுரி அடுத்த நத்தஹள்ளி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து இரு டிப்பர் லாரிகளில் மண் ஏற்றி கொண்டிருந்த போது, அவ்வழியாக ரோந்து சென்ற இண்டூர் போலீஸார் இரு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து லாரி டிரைவர்கள் நத்தஹள்ளியை சேர்ந்த கண்ணன் (25), அசோக்குமார் (27) இருவரையும் கைது செய்தனர். டிப்பர் லாரி உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர். * இண்டூர் அடுத்த நாகர்கூடல் பகுதியில் உள்ள ஓடையில் டிராக்டரில் மணல் வாரி கொண்டிருந்த கழனிகாட்டூரை சேர்ந்த மாது (29), ஏமகவுண்டனூரை சேர்ந்த தங்கம் (33) ஆகிய இருவரையும் இண்டூர் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago