உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விளையாட்டு போட்டி செந்தில் பள்ளி வெற்றி

விளையாட்டு போட்டி செந்தில் பள்ளி வெற்றி

தர்மபுரி: சரக அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில், தர்மபுரி செந்தில் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிகளில், 800க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். செந்தில் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மேல் மூத்தோர் எறிபந்து போட்டியில் இரண்டாமிடத்திலும், சிலம்பம் போட்டியில் முதலிடத்திலும் வெற்றி பெற்றனர். மேல் மூத்தோர் கேரம் ஒற்றையர் பிரிவில் முதலிடத்திலும், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடத்திலும், மேல் மூத்தோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடத்திலும், செஸ் ஜூனியர் பிரிவில் இரண்டாமிடத்திலும், மூத்தோர், மேல் மூத்தோர் பிரிவில் முதலிடத்திலும், மேசைப்பந்து மூத்தோர் ஒற்றையர் பிரிவிவில் இரண்டாமிடத்திலும், இரட்டையர் பிரிவில் முதலிடத்திலும், மேல் மூத்தோருக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடத்திலும், இரட்டையர் பிரிவில் முதலிடத்திலும், இறகு பந்து மூத்தோர் ஒற்றையர் பிரிவில், இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்