உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

அரூர்: அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார்.இதில், அரூர் தாசில்தார் பெருமாள், ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கனிமொழி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை திட்ட அலுவலர் வாசுதேவன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன், அடையாள அட்டை உள்ளிட்டவைகள் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் மனுக்கள் வழங்கப்பட்டது.முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் உரிமை மீட்பு குழு சார்பில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், இலவச வீட்டுமனை வேண்டியும், டவுன் பஞ்., பகுதியில் பெட்டிக் கடை வைக்க கடை ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த தாசில்தார் பெருமா-ளிடம், தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய-வற்றை ஒப்படைக்க முயன்றனர்.அவற்றை வாங்க மறுத்த தாசில்தார் பெருமாள், வீட்டுமனை கேட்டு மனு அளித்தவர்களுக்கு உடனடியாக நிலத்தை காட்டி அளவீடு செய்து தருவதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து, நட-வடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்-டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !