உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு

தர்மபுரி: தர்மபுரியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு, வட்டார அளவிலான பயிற்சி வகுப்புகள் நடந்தன.தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 135 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட, 311 தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடி கல்வி பயிற்சிகள் துவக்கி வைக்கப்பட்டது. தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இப்பயிற்சியை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் துவக்கி வைத்தார். இதில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் மற்றும் பாடல்களை உரக்க படித்தல், வார்த்தை அட்டைகள், குழு செயல்பாடு மற்றும் தனிநபர் செயல்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், கணிதத்தில் எண்கள் அறிதல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை கற்பித்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல் குறித்த பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களின் கற்றல் திறனை அறிந்திடும் வகையில், ஒவ்வொரு அலகு இறுதியிலும் ஓ.எம்.ஆர்., தாளை கொண்டு மதிப்பீடு செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் மற்றும் நாகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்