உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட அளவிலான முதலாம் காலாண்டு கண்காணிப்பு குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம், 2017 ன் படி பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப் பட்டது. மேலும், எண்ணெய் மற்றும் பருப்பு உரிய காலத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கொண்டு சென்று வினியோகம் செய்ய வேண்டும். கடந்தாண்டு முதல், வழங்கி வரும் ராகியை, குடும்ப அட்டைதாரர்களுக்கு தவறாமல் வழங்க வேண்டும். குடிமைப்பொருட்கள் தேவையின் அடிப்படையில், 100 சதவீதம் முன் நுகர்வு செய்யப்பட வேண்டும். தரம் மற்றும் எடையளவு சரியாக உள்ளதை எடையாளர்கள் உறுதி செய்ய வேண்டுமென, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) நர்மதா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் யசோதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை