உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை, மாவட்ட செயலாளர் பழனியப்பன் தொடங்கினார்.தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியிலுள்ள மோளையானுார் ஊராட்சியில் மண், மொழி, மானம் காத்திட, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற, தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கையை, மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தொடங்கினார். அவர், மோளையானுார், பூனையானுார், தேவராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, பொதுமக்களிடையே, தி.மு.க.,வின் சாதனைகளை எடுத்துக்கூறி, 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் ஸ்டிக்கரை வீட்டின் முகப்பு பகுதியில் ஒட்டி, குடும்பத்திலுள்ள உறுப்பினர்களை இணைய வழியாக, தி.மு.க., உறுப்பினராக சேர்த்து, அதற்குண்டான, தி.மு.க., உறுப்பினர் அட்டையை அப்போதே வழங்கினார். நிகழ்ச்சியில், ஓட்டுச்சாவடி குழு முகவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை