உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்களை கேவலப்படுத்தும் தி.மு.க., ஆட்சி

பெண்களை கேவலப்படுத்தும் தி.மு.க., ஆட்சி

பாப்பிரெட்டிப்பட்டி:-''பெண்களை கேவலப்படுத்தும் ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி உள்ளது. அமைச்சர் பொறுப்பிலிருந்து பொன்முடியை நீக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என, அ.தி.மு.க., தர்மபுரி மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார். பெண்களை இழிவு படுத்தும் வகையில் ஆபாசமாக பேசிய, அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., தர்மபுரி மாவட்ட மகளிரணி சார்பில், கடத்துாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: பெண்களை இழிவாக பேசிய, அமைச்சர் பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய முதல்வர் ஸ்டாலின், அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை ஸ்டாலின் பாதுகாப்பதால், பெண்களை இழிவாக பேசியதை, முதல்வர் ஸ்டாலினும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் தான் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் யாராவது இப்படி பேசி இருந்தால், அடுத்த நிமிடமே நீக்கப்பட்டு, அவரின் பதவி பறிக்கப்பட்டிருக்கும். பெண்களை கேவலப்படுத்துகின்ற ஆட்சியாக, தி.மு.க., உள்ளது. இந்த ஆட்சியை அகற்றி, 2026ல் இந்த ஆட்சிக்கு பெண்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நிர்வாகிகள் மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் மதிவாணன், நகர செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை