உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் டிரைவர் சடலம் மீட்பு

கிணற்றில் டிரைவர் சடலம் மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த மணலுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 30. பால் வண்டி டிரைவர். இவர் கடந்த ஜன., 22ல் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துாரை சேர்ந்த பவித்ரா, 19 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த, 27ல் இரவு உறவினர் முருகேசனின் மனைவி பாக்கியலட்சுமி, மணிகண்டனுக்கு போன் செய்து மாடு அவிழ்த்து கொண்டு தோட்டத்தில் மேய்வதாக கூறினார். அதை பிடித்து கட்ட மணிகண்டன் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த, 2ல் முருகேசனின் கிணற்றில் மர்மமான முறையில் மணிகண்டன் இறந்து கிடந்தார். பொம்மிடி போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ