உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மரக்கிளை விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

மரக்கிளை விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜி, 74. புளி வியாபாரி. இவர் மனைவி காந்தி, 60. இவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள நெடுஞ்சாலை புளியமரங்களை, புளி பறிக்க குத்தகைக்கு எடுத்துள்ளனர். நேற்று மதியம் புளியமரத்தில் அப்பகுதியை சேர்ந்த உதயன், 39, என்பவர் புளி உலுக்கினார். சாலையில் விழுந்த புளியை ராஜி மனைவி காந்தி மற்றும் அவரது உறவினர் செல்வம், 60, ஆகியோர் சேகரித்தனர்.அப்போது உதயன் நின்றிருந்த மரக்கிளை உடைந்து விழுந்தது. இதில் உதயனுக்கு இடுப்பிலும், காந்திக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் காந்தி உயிரிழந்தார். உதயன் சிகிச்சை பெற்று வருகிறார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை