மேலும் செய்திகள்
60 பவுன் நகை தர மறுப்பு: புகார்
19-Oct-2025
மேட்டூர், பிறந்த நாளன்று, அரசு பஸ் மோதி டூவீலரில் சென்ற எலக்ட்ரீஷியன் படுகாயம் அடைந்தார்.மேட்டூர், கோபால் நகர் வேல்முருகன் மகன் எலக்ட்ரீஷியன் பரசுராமன், 22. குடும்ப பிரச்னை காரணமாக இடைப்பாடி, நாச்சியம்பாளையத்தில் உள்ள தனது பெரியப்பா மூர்த்தி வீட்டில் தங்கி, பரசுராமன் எலக்ட்ரீஷியன் வேலை செய்தார்.தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் பரசுராமன் மேட்டூர், நேரு நகரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக, அவரது அண்ணன் வேதகிருஷ்ணமூர்த்தியின் டி.வி.எஸ்., க்யூப் மொபட்டில் சென்றுள்ளார். இரவு, 10:45 மணியளவில் வீட்டுக்கு செல்வதற்காக, மொபட்டில் மேட்டூர் சின்னபார்க் அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது மேட்டூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பஸ், மொபட் மீது மோதியது. விபத்தில் பரசுராமன் படுகாயமடைந்து மயங்கினார். அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.சம்பவம் குறித்து அவரது தந்தை வேல்முருகன் கொடுத்த புகார்படி, மேட்டூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19-Oct-2025