உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு துறை காலி பணியிடங்களை நிரப்ப ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அரசு துறை காலி பணியிடங்களை நிரப்ப ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தர்மபுரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் தர்மபுரி சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயவேல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்து பேசினார். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2025 ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவு விளையும் தக்காளி, மாம்பழங்கள் கொள்முதல் பருவத்தில் வீணாவதை தடுக்க, குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் விடுபட்ட, 4 ஒன்றியங்களில் உள்ள, 8 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை