உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா

இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா

தர்மபுரி, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பேரவை செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். ஹிந்து, இஸ்லாமியர், கிருஸ்துவர் என மும்மத குருக்கள், இ.பி.எஸ்., நீண்ட காலம் வாழ வேண்டியும், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்து அமைதி நீடிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான அன்பழகன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நகர செயலார் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை