உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., ஆபீஸில் நிர்வாகிகள் ஆலோசனை

தி.மு.க., ஆபீஸில் நிர்வாகிகள் ஆலோசனை

காரிமங்கலம் :தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தி.மு.க., மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 40 சதவீதம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்கும் பணியில் ஈடுபடுவது குறித்தும், 18 வயது பூர்த்தியானவர்களை இணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.தொகுதி பார்வையாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை